![]() |
| அவரின் ஒரிஜினல் படம் |
| அவரின் ப்ரோஃபைல் படம் |
பிரபல பதிவர் பட்டாப்பட்டி அவர்கள் மாரடைப்பால் மரணமடைந்து விட்டதாக நண்பர் வெளங்காதவன் மூலம் அறிந்து அதிர்ச்சியடைந்தேன்.
எனக்கு பட்டாப்பட்டியுடன் அதிக தொடர்பு இல்லாவிட்டாலும் கூட, என் பதிவுகளுக்கு அவ்வப்போது கமெண்ட் போடுவார். அவரோடு பலமுறை சாட்டில் பேசியிருக்கேன். அவ்வளவுதான். சொல்லவந்த கருத்தை நகைச்சுவையாகவும், அதேநேரம் உறுதியாகவும் சொல்வதில் அவர் வல்லவர். சமீபத்தில் கூட நண்பர் வெளங்காதவனிடம் போனில் பேசியபோது யோவ் உன்னை பட்டாப்பட்டி விசாரித்தார்யா என்றார். இன்று அதே வெளங்காதவன் பட்டாப்பட்டி இறந்து விட்டதாக சொன்னார். அவரின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
பட்டாப்பட்டியின் வலைத்தளம்
பட்டாப்பட்டியின் முகநூல் பக்கம்
| Tweet |



